ரசிகர்களால் கடவுள் போல் போற்றப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சிறந்த விமர்சகர் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ், முதன் முறையாக தனது வாழ்வில் நடந்த, சுவையான, சோகமான மற்றும் பாடம் கற்ற நிகழ்வுகளை புத்தகமாக எழுதியுள்ளார்.
'ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள அந்த புத்தகத்தை சூப்பர்ஸ்டார் பிறந்தநாளான (டிசம்பர் 12) அன்று 'ஹார்ப்பர்காலின்ஸ்' பதிப்பகத்தின் இந்தியப் பிரிவு வாங்கி வெளியிட்டது.
இது குறித்து ஐஸ்வர்யா சில சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துக்கொண்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில், அப்பா நடிக்கும் படங்களை முதலில் விமர்சனம் செய்வது நான் தான், கொஞ்சம் ஓவராக இருந்தால் அதனை கோவமாக இல்லாமல் சாதரணமாக கூறிவிடுவேன் என்று கூறியுள்ளார்.
ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக இருந்து வீட்டிலும், சமூகத்திலும், எம்மாதிரியான விஷயங்களுக்கு எப்படி முகம் கொடுக்கிறார் என்பதை நேர்மையான முறையில் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்.