Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ஐஸ்வர்யா அர்ஜுன்& உமாபதி திருமண நிச்சயதார்த்தம்!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (08:05 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அர்ஜுன். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக வலம் வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடிக்கிறார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியோடுதான் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவலகள் பரவி வந்தன. இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இப்போது பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள் என்ற தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் , அர்ஜுன் கட்டியுள்ள அஞ்சநேயர் கோயிலில் இரு குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்