ஐரா முதல் நாள் வசூல் இவ்வளவா!!!

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (11:49 IST)
ஐரா படத்தில் வசூல் நிலவரம் பற்றின தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
 
சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர் உள்ள படத்தையே தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா  ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் 'ஐரா' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா யமுனா, பவானி என  இரண்டு வேடங்களில் முதன்முறையாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் ரூ 33 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளன. வார இறுதி என்பதால் படம் இன்னும் கலெக்‌ஷன்களை அள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments