Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ ஹாலிவுட் ஹல்க் திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன்...?

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (15:53 IST)
ஐ படத்தைப் பற்றிதான் கோடம்பாக்கம் ஆச்சரியத்துடன் பேசி வருகிறது. சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டும் ஐ படத்தின் ஐம்பது விநாடி டீஸர் திரையிட்டு காட்டப்பட்டது.


 


இந்தப் படத்தில் வரும் விக்ரமின் தோற்றம் ஹாலிவுட்டின் ஹல்க் திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷனில் ஷங்கர் ஐ படத்தை எடுத்திருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
படத்தின் டீஸரில் ஆஜானுபாகுவான விக்ரம் காட்டப்பட்டுகிறார். மேலும், உடல் முழுவதும் முடியுடன் கோரைப் பற்களுடன் ஓநாய் தோற்றத்தில் வரும் காட்சியும் உள்ளது. விளையாட்டு வீரரின் மீது செய்யப்படும் அறிவியல் பரிசோதனை தவறாக முடிய, விபரீதம் ஏற்படுவதுதான் படத்தின் கதை எனவும் கிசுகிசுக்கின்றனர்.
 
டீஸரில் வரும் காட்சிகள் ஹல்க் படம் ஷங்கரை கடுமையாக பாதித்துள்ளதை தெரியப்படுவத்துவதாக கூறுகின்றனர். ஆனால் எந்தப் படத்தையும் அப்படியே தழுவி எடுப்பவரல்ல ஷங்கர். அவரது படங்கள் அனைத்துமே - எந்திரன் தவிர்த்து - அசலானவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
வரும் தீபாவளிக்கு ஐ வெளியாகிறது.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments