Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய ஜெயா

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (17:09 IST)
ஷங்கரின் பிரமாண்ட படைப்பான ஐ யின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜெயா தொலைக்காட்சி வாங்கியுள்ளது.


 
 
இந்த வருடம் வெளியாக உள்ள திரைப்படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது ஆஸ்கர் ஃபிலிம்ஸின் ஐ திரைப்படத்துக்குதான். விக்ரம் இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். செப்டம்பர் 15 நடக்கும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கலந்து கொள்கிறார்.
 
ஐ யின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜெயா தொலைக்காட்சி வாங்கியுள்ளது. அஞ்சான் போன்ற பெரிய படங்களின் ஒளிபரப்பு உரிமையை போட்டிப் போட்டு வாங்கிய சன் தொலைக்காட்சி ஐ விஷயத்தில் ஏமாற்றமடைந்துள்ளது. ஆஸ்கர் ஃபிலிம்ஸின் முந்தையப் படங்களான வல்லினம், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களின் ஒளிபரப்பு உரிமையையும் ஜெயாவே வாங்கியது குறிப்பிடத்தக்கது.

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Show comments