Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அண்ணன் சிம்பு படத்தில் தம்பி குறளரசன்

மீண்டும் அண்ணன் சிம்பு படத்தில் தம்பி குறளரசன்

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (10:43 IST)
சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைத்த சிம்புவின் தம்பி குறளரசன் மீண்டும் அண்ணனின் படத்துக்கு இசையமைக்கிறார்.


 
 
இது நம்ம ஆளு படம் தாமதமானதற்கு குறளரசன் டியூன்களை சரியான நேரத்தில் தராததும் ஒரு காரணம். பின்னணி இசை சேர்ப்பிலும் தாமதம் ஏற்பட்டது. அதன் காரணமாக படத்தின் முதல் டீசரை பின்னணி இசை இல்லாமல் பாண்டிராஜ் வெளியிட்டார். பாண்டிராஜும், குறளரசனும் இசை மற்றும் பாடல்கள் விஷயத்தில் நேரடியாகவே மோதிக் கொண்டனர்.
 
இந்நிலையில் மீண்டும் சிம்பு படத்துக்கு குறளரசன் இசையமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் மீண்டும் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார். டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு குறளரசன் இசையமைக்க உள்ளதாக தகவல். அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களுக்குப் பிறகு இந்தப் படம் தொடங்கப்பட உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

ப்ரதீப்பின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments