Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரஜினியை வம்பிக்கிழுத்த வர்மா

மீண்டும் ரஜினியை வம்பிக்கிழுத்த வர்மா

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (12:24 IST)
ரஜினியை வம்பிகக்கிழுப்பதே ராம் கோபால் வர்மாவின் வேலையாகிவிட்டது. பல நேரம் அவர் சொல்வதில் அடிப்படை உண்மை இருந்தாலும் அதனையும் ஆணவமாகவே பார்க்கிறது சமூகம்.

 

 
 
இந்தமுறை ரஜினியை நடிகர் சுதீப்புடன் ஒப்பிட்டிருக்கிறார் வர்மா. சுதீப்பின் முடிஞ்சா இவன புடி கன்னடத்தில் கோட்டிபாபா 2 என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த வர்மா, உங்க பெயரை கிச்சா சுதீப் என்பதற்கு பதில் ரஜினி சுதீப் என்று மாற்றிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

அத்துடன் ரஜினி ஒரேவிதமான கதாபாத்திரங்களில்தான் நடிக்கிறார். ஆனா, நீங்கள் பன்முகத்தன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்கள். ரோபோ படத்தை தூங்கிக் கொண்டே நீங்கள் செய்யலாம். ஆனால், ஈகா போன்ற படத்தை ரஜினியால் கனவிலும் செய்ய முடியாது என ரஜினியை ஒரேயடியாக வாரியுள்ளார். 
 
அதேபோல் கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தனையும் கிண்டல் செய்துள்ளார் வர்மா. சுதீப்புடன் ஒப்பிட்டால் விஷ்ணுவர்தன் வெறும் கத்துக்குட்டி என வர்மா வர்ணித்துள்ளார். 
 
வர்மாவின் பாராட்டை ஏற்றுக் கொண்ட சுதீப், ரஜினி, விஷ்ணுவர்தன் ஆகியோரின் பக்கத்தில்கூட தன்னால் வர முடியாது, அவர்களுடன் தன்னை ஒப்பிடவும் முடியாது என்று பணிவுடன் பதிலளித்துள்ளார்.

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments