Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் படமாகிறதா வீரப்பன் கதை?

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (18:34 IST)
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி ஏற்கெனவே சில படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இன்னொரு படம் உருவாகும்  எனத் தெரிகிறது.

 
 
சந்தனக் கடத்தல் வீரப்பனை, ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படையினர், கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து, தேடுதல் வேட்டை எல்லாவற்றையும் கலந்து, ‘வீரப்பன் – சேசிங்  த பிரிகண்ட்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ். 
 
இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, மும்பையில் நடைபெற்றது. பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய் குமார் கலந்துகொண்டு  புத்தகத்தை வெளியிட்டார். அப்போது, ‘இந்த புத்தகத்தைப் படமாக எடுத்தால், நீங்கள் வீரப்பனாக நடிப்பீர்களா? இல்லை,  விஜயகுமாராக நடிப்பீர்களா?’ என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. 
 
அதற்குப் பதிலளித்த அக்‌ஷய் குமார், “இரண்டு கேரக்டர்களிலும் நடிக்க எனக்கு ஆசை தான். ஆனால், விஜயகுமார் கேரக்டரில் நடிக்கவே அதிகம் ஆசைப்படுகிறேன். காரணம், புத்திசாலித்தனமாக திட்டம் தீட்டி வெற்றிகரமாக ஆபரேஷனை நடத்தியவர்  அவர்தான்” எனக் குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்?.. வெளியான சென்சார் தகவல்!

எந்த இயக்குனராவது இப்படி பண்ணுவாரா? சுகுமாரை மேடையிலேயே புகழ்ந்த அல்லு அர்ஜுன்!

விவாகரத்து வதந்திகளுக்கு மறைமுகமாகப் பதிலளித்த அபிஷேக் பச்சன்!

திரையரங்கு வாசலில் விமர்சனம் எடுக்க அனுமதிக்க வேண்டும்… ஆனால்? –இயக்குனர் சீனு ராமசாமி வேண்டுகோள்!

ஏ ஆர் ரஹ்மான் எனக்குத் தந்தை போன்றவர்… கிடாரிஸ்ட் மோஹினி டே பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments