Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ஜீ.வி.பிரகாஷ்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (11:54 IST)
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.
விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘மெர்சல் அரசன் வாரான்’ பாடலைப் பாடியவர் ஜீ.வி.பிரகாஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலை விவேக் எழுதியிருந்தார். குத்துப் பாடலான இது, எல்லோரையும் கவரும் வகையில் இருந்தது.
 
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். இந்த முறை தான் ஹீரோவாக நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’  படத்துக்காகப் பாடியுள்ளார். ராஜிவ் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி, வினீத், நெடுமுடி வேணு, குமரவேல், டிடி ஆகியோர்  நடித்துள்ளனர்.
 
“சர்வம் தாள மயம் படத்துக்காக இந்தியாவின் மொஸார்ட் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஓப்பனிங் பாடலைப் பாடியுள்ளேன். ‘பீட்டர் பேட்ட எது’ என்று தொடங்கும் இந்தப் பாடல், ‘ஊர்வசி’ பாடலுக்குப் பிறகான செம தரை லோக்கலாக இருக்கும். இளைஞர்களின் ஆந்தமாக இது இருக்கும்” என்று  தெரிவித்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? வேகமாக பரவி வரும் வதந்தி..!

நடிகை பிந்து போஸுக்கு கே.பி.ஒய் பாலா வழங்கிய உதவி.. ஷகிலா எடுத்த பேட்டி..!

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments