Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை அடுத்து எஸ்.ஏ.சியை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (17:12 IST)
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜய்க்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இதனால்,   விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. அதிலும் குறிப்பாக விஜய் தன்னுடைய தந்தையிடம் பேசியே பல ஆண்டுகள் ஆவதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், விஜய் 68 பட டெஸ்ட் ஷூட்டிற்காக  அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய  விஜய், அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் தனது  தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை  நேரில்  சந்தித்து நலம்  விசாரித்தார். அப்போது, தந்தை மற்றும் தாய் ஷோபாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், விஜய்யை அடுத்து, விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தும் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் தன் சமூக வலைதள பக்கத்தில்,

 
‘’பிள்ளைகள் ஒன்று சேரும் போது
பெற்றோருக்கு  மட்டும் அல்ல
மொத்த குடும்பத்துக்கே
வலிமை கூடுகிறது’’ என்று பதிவிட்டு, புஸ்ஸி ஆனந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments