விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் சமந்தா

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (08:00 IST)
விஜய்சேதுபதி, சமந்தா முதல்முறையாக இணைந்து நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதியும் சமந்தாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். இயக்குனர்  டில்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு துக்ளக் என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது. தற்போது இந்த படத்தின் டைட்டில் 'துக்ளக் தர்பார்' என்று மாற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாகவும் தகல்வகள் வந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்து மிகப்பெரிய லாபம் பெற்ற நிறுவனமான '7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments