Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவித்ரியை அடுத்து மேலும் ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி சுரேஷ்

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (14:47 IST)
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘நடிகையர் திலகம்’ என்ற படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது மட்டுமின்றி தேசிய விருதும் கிடைத்தது. இந்த நிலையில் சாவித்ரியை அடுத்து கின்னஸ் சாதனை செய்த இன்னொரு நடிகையின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.
 
மறைந்த பழம்பெரும் நடிகை விஜயநிர்மலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தான் சரியான நபர் என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. 
 
தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் 250 படங்களில் நடித்தது மட்டுமல்லாமல், உலகிலேயே 42 படங்களை இயக்கிய ஒரே பெண் இயக்குனர் என்கிற கின்னஸ் சாதனைக்கும் சொந்தக்காரர் விஜய நிர்மலா என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கொரோனா பரபரப்பு முடிந்ததும் தொடங்கவிருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments