சாத்தான்குளம் விவகாரம்: ரஜினியை அடுத்து களத்தில் இறங்கிய கமல்!

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2020 (16:46 IST)
சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென அவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக தான் இருவரும் மரணமடைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் சற்று முன் வெளியான தகவலின்படி ஆய்வாளர் ஸ்ரீதர் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கோலிவுட் திரையுலகினர் பலர் இது குறித்து ஆவேசமாக தங்களுடைய கருத்துகளை டுவிட்டரில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயராஜ் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் என்ற செய்தியை சற்று முன்னர் பார்த்தோம்
 
இந்த நிலையில் ரஜினியை அடுத்து கமல்ஹாசன் அவர்களும் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் குடும்பத்தினர்களுடன் தொலைபேசியில் ஆறுதல் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் என்பவரும் ஜெயராஜ் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments