Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை தமன்னாவுக்கு விருது

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (14:07 IST)
சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை தமன்னாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் உதயநிதி , தமன்னா, வடிவுக்கரசி, விடிவி கணேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம்  கண்ணே கலைமானே. இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியிருந்தார்.

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி  3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தை சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்ப உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதில்,’’ ‘2019ம் ஆண்டில் வெளியான #கண்ணேகலைமானே  திரைப்படத்தை (festival version) திரைப்பட விழாக்களில் பங்கு பெறும் வகையில் 1.43.08 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக  யதார்த்தமாக அதன் அனைத்து நிலையிலும் அந்நாளில் உருவாக்கி இருந்தேன்.

கொல்கத்தா திரைப்பட விழாவில் விருது பெற்றதோடு கொரோனா வந்தது, தாமதமானாலும்  காலஇடைவெளியை பற்றிக் கவவைப்படாத சர்வதேச திரைப்பட  விழாக்களுக்கு மீண்டும் போகிறது மக்கள் அன்பன்  உதயநிதி, தமன்னா நடித்த #கண்ணேகலைமானே’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற இந்தோ – பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் கண்ணணே கலைமானே திரைப்படத்தில் நடித்த நடிகை  தமன்னாவுக்கு சிறந்த நடிக்கைக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

எனவே, நடிகை தமன்னாவுக்கு சினிமா துறையினர் மற்றும்  ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 நாட்களில் ரூ.126.64 கோடி வசூலித்த ‘கங்குவா’.. நெகட்டிவ் விமர்சனத்தையும் தாண்டி சாதனை..!

புஷ்பான்னா ஃபயர் இல்ல.. வைல்டு ஃபயர்..! - எப்படி இருக்கிறது புஷ்பா 2 ட்ரெய்லர்?

’கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது: ஜோதிகா கொந்தளிப்பு!

ராமாயணம், மஹாபாரதம் எடுத்தது போதும்..! தசவதாரத்தை கையில் எடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!

பிக்பாஸ் வீட்டில் இன்று எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் இவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments