Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மையோசிட்டீஸ் பிரச்சனையை விட அதற்கு முந்தைய ஆண்டுதான் கடினமான ஆண்டு… சமந்தா வருத்தம்!

vinoth
புதன், 21 பிப்ரவரி 2024 (10:34 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா டேக் 20 என்ற புதிய பாட்காஸ்ட் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில் தான் சந்தித்த உடல் நலப் பிரச்சனைகள் பற்றியும் உடல்நலத்தை பேணுவதைப் பற்றியும் பேசுகிறார். இனிமேல் தொடர்ந்து படங்களில் அவர் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள நேர்காணலில் “மையோசிட்டீஸ் பிரச்சனையை கண்டறிவதற்கு முந்தைய ஆண்டுதான் எனக்கு மிகவும் கடினமான ஆண்டு.  அப்போது நீண்ட நாட்களாகவே நான் நிம்மதியில்லாமலும் அமைதியில்லாமலும் இருந்து வந்தேன்.  இப்போது அதிலிருந்து விலகியுள்ளேன். இனிமேல் வேலைகளில் கவனம் செலுத்துவேன்” எனப் பேசியுள்ளார். மையோசிட்டீஸ் பிரச்சனைக்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் சமந்தா தன்னுடைய கணவரை பிரிந்தார். அதனால்தான் அந்த ஆண்டை கடினமான ஆண்டு எனக் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம்!

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் ஹீரோயின் ஆகும் தமிழ் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments