Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பணம் புகழுக்காக அலையமாட்டேன்… எல்லாம் நம்மைத் தேடி வரும்” – சமந்தா கருத்து!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (09:14 IST)
நடிகை சமந்தா தற்போது உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வருகிறார்.

பிரபல நடிகை சமந்தா மையோசிட்டிஸ் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையில் இருப்பதாகவும், அதில் இருந்து இப்போது குணமாகி வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் அவர் சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என நம்பிக்கை வார்த்தைகளை பகிர்ந்திருந்தனர்.

இதையடுத்து அவர் சமீபத்தில் ரிலீஸ் ஆன அவரின் யசோதா படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்துகொண்டார். இந்நிலையில் இப்போது சமந்தாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் புதிதாக படங்களில் ஒப்பந்தமாகவில்லை.

இந்நிலையில் இப்போது சமந்தா “ எனக்கு பணமோ புகழோ முக்கியமில்லை. நமக்கு நல்ல நேரம் இல்லாத போது எதுவுமே நமக்குக் கிடைக்காது. இருப்பதை வைத்து இஷ்டப்படி வாழ்ந்தால் எல்லாமே கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments