Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

vinoth
வியாழன், 20 மார்ச் 2025 (14:57 IST)
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 80 கள் மற்றும் 90களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ரேவதி. அதன் பின்னர் குணச்சித்திர வேடத்த்துக்கு தன்னை மாற்றிக்கொண்டு அதிலும் கலக்கினார். ஆனால் அவர் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படங்களையும் இயக்கியுள்ளார் என்பது பெருவாரியான ரசிகர்கள் அறியாதது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பாலிவுட் ஹீரோயின் கஜோல் நடித்த சலாம் வெங்கி என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பரவலானக் கவனத்தைப் பெற்ற நிலையில் இப்போது அவர் மீண்டும் இயக்குனர் ஆகியுள்ளார். இந்த முறை அவர் ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிறார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த தொடர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரேவதி தன்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் என் சினிமா வாழ்க்கையில் நடித்த அனைத்துப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை. ஒரு கட்டத்தில் எனக்குப் பிடிக்காத படங்களில் கூட விருப்பமில்லாமல் நடித்திருக்கிறேன். சினிமாவை நான் மிகவும் விரும்புகிறேன். அதனைக் காசு சம்பாதிக்கும் ஒரு வழியாக மட்டும் நான் பார்க்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments