Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரை நிர்வாணமாக நடித்தது உண்மையா? நடிகை பிரியங்கா விளக்கம்

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (20:20 IST)
வசந்தபாலன் இயக்கிய ’வெயில்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பிரியங்கா, அதன் பின்னர் ஒருசில தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் தமிழில் ராஜா கஜினி என்பவர் இயக்கும் ’உற்றான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது 
 
 
இந்த நிலையில் ’உற்றான்’ படத்தில் நடிகை பிரியங்கா அரை நிர்வாணமாக நடித்துள்ளதாக சமீபத்தில் இணையதளங்களில் செய்திகள் மிக வேகமாக பரவியது. இதனை அடுத்து இது குறித்து விளக்கமளித்த நடிகை பிரியங்கா ’உற்றான்’ படத்தில் தான் அரை நிர்வாணமாக நடிக்கவில்லை என்றும், இது தவறான தகவல் என்றும் கூறினார். மேலும் ’உற்றான்’ படம் தனக்கு தமிழில் ஒரு ரீ-எண்ட்ரி படமாக இருக்கும் என்றும், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ராஜா கஜினி அவர்களுக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்து கொண்டார் 
 
 
இந்த நிலையில் ’உற்றான்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காகவும் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும், படக்குழுவினரை இது போன்ற ஒரு வதந்தியை கிளப்பி விட்டதாக கூறப்படுகிறது.  ’உற்றான்’ என்று ஒரு படம் உருவாகி வருவதே பலருக்கு தெரியாத நிலையில் இந்த அரை நிர்வாண செய்தியால் தற்போது இந்த படம் அனைவருக்கும் தெரிந்து விட்டது என்பதால் இந்த வதந்தியை படக்குழுவினர் ஒரு வெற்றியாக கருதுவதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments