Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை பிரணிதா சென்ற கார் கவிழ்ந்து விபத்து: தெலங்கானாவில் பரபரப்பு

நடிகை பிரணிதா சென்ற கார் கவிழ்ந்து விபத்து: தெலங்கானாவில் பரபரப்பு
, திங்கள், 15 பிப்ரவரி 2016 (09:39 IST)
சகுனி படத்தில் நடித்த நடிகை பிரணிதா தெலங்கானாவில் நடந்த கார் விபத்தில் உயிர் தப்பினார். அவருடன் சென்ற 2 பேர் காயம் அடைந்தனர்.


 

 
கார்த்தி ஜோடியாக "சகுனி" படத்தில் நடித்தவர் பிரணிதா. இவர் "மாசு" படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ளார்.
 
பிரணிதா தெலுங்கு மற்றும் கன்னட பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்த வருகிறார். அவரது சொந்த ஊர் பெங்களூரு.
 
இந்நிலையில், பிரணிதா தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் துணிக்கடை திறப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார்.
 
இந்த விழா முடிந்தபின்னர், காரில் ஹைதராபாத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடைய தனி உதவியாளர், ஓட்டுநர் மற்றும் 2 பேரும் அதே காரில் சென்றனர்.
 
அவர்கள் சென்ற கார், நல்கொண்டா மாவட்டம் மோதே காவல் நிலையம் அருகே ஒரு வளைவில் திரும்பியபோது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்தது.
 
அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர், காரை திருப்பினார். அப்போது கார் நிலைதடுமாறி குப்புற கவிழ்ந்தது.
 
இந்த விபத்தில் பிரணிதா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநருக்கும், மற்றொருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், விபத்து நடந்த பகுதிக்கு அருகில் சாலைப்பணியில் ஈடுபட்டிருந்வர்கள், ஆம்புலன்சை வரவழைத்து, காயமடைந்த 2 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த விபத்து குறித்து நடிகை பிரணிதா, தனது "டுவிட்டர்" பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:–
 
நான் நலமாக இருக்கிறேன். கவலைப்படுமளவிற்கு எதுவும் இல்லை. என் உதவியாளர் காயம் அடைந்துள்ளார்.
 
எனவே, நாங்கள் அனைவரும் பத்திரமாகவே உள்ளோம். சரியான நேரத்தில் ஆம்புலன்சை வரவழைத்த சாலைப் பணியாளர்களுக்கு கிகப் பெரிய நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil