Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றியுடன் தொடங்கிய ஓவியாவின் வருடம்

வெற்றியுடன் தொடங்கிய ஓவியாவின் வருடம்
, வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (11:55 IST)
ஓவியாவுக்கு சென்ற வருடம் சுபமாக அமையவில்லை. மாறாக இந்த வருடம் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. சண்டமாருதம் படத்தையா சொல்றீங்க என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. இல்லை, இது வேறு.
விமல், லட்சுமிமேனன் நடித்த மஞ்சப்பை திருப்பதி பிரதர்ஸுக்கு 14 கோடிகள் அளவுக்கு லாபம் சம்பாதித்து தந்தது. அந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.
 
கன்னடத்தில் ஓவியா நடிப்பில் மிஸ்டர் பொம்மகா என்ற பெயரில் தயாராகியது. ராகவன் என்பவர் இயக்கிய இப்படம் கன்னடத்திலும் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இதில் ஓவியாவின் காதலனாக விமல் வேடத்தில் நடித்தவர் பெயரில் மட்டும் பருவத்தை கொண்டிருக்கும் பருவராகம் ரவிச்சந்திரன். 
 
இருபது வயது ஓவியாவுக்கு அறுபது வயது சரத்குமாரும் ரவிச்சந்திரனும்தான் கிடைக்கிறார்கள். ம்... பாவம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil