ஃபெப்சிக்கு ரூ.20 லட்சம்: நடிகை நயன்தாரா நிதியுதவி!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (12:27 IST)
அமைப்பான ஃபெப்சிக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் நடிகை நயன்தாரா.
 
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 19 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. எப்போது படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் சினிமாவில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
படப்பிடிப்புகள் முடங்கியுள்ளதால், 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார். இதனையடுத்து பல முன்னணி நடிகர்கள் நிதி உதவி அளிக்க முன்வந்தனர். 
 
அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா தமிழ்நாடு சினிமா தொழிலாளர்களின் அமைப்பான ஃபெப்சிக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். பல நடிகர்களுக்கு மத்தியில் ஒரு நடிகையாக தன்னால் இயன்றதை செய்ய முந்வந்துள்ள நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments