Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (08:41 IST)
நடிகை நமீதா தனது புதிய ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார்.

2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களால் பேசப்படும் நடிகையாக வலம் வந்தார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களில் நடித்து மார்க்கெட்டைப் பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். இப்படி தமிழக மச்சான்ஸ்களின் மனதில் கூடுகட்டி வாழ்ந்த நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பட்டிதொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டார்.

அரசியலிலும் கால்பதித்த அவர் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் நமீதா தியேட்டர்ஸ் எனும் ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை அந்த தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிகிறது. அடுத்த மாதம் முதல் அந்த தளம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments