Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மல மல' மும்தாஜின் சிறுவயது கனவு என்ன தெரியுமா?

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (06:22 IST)
டி.ராஜேந்தர் அறிமுகம் செய்த நடிகைகளில் ஒருவர் நடிகை மும்தாஜ். மும்தாஜ் என்றாலே 'மல மல' பாட்டும், கட்டிப்பிடி கட்டிபிடிடா பாட்டும் தான் ஞாபகத்திற்கு வரும்,. தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மும்தாஜ், தற்போது தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லை என்றாலும் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.



 


தமிழில் சரியான கதை கிடைக்காததால் நடிக்கவில்லை என்றும் கூடிய விரைவில் தமிழில் நடிப்பேன் என்றும் கூறிய மும்தாஜூக்கு சிறுவயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம். இதுகுறித்து அவர் கூறியபோது, 'டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் தனது சிறுவயது லட்சியம் என்றாலும் காலம் என்னை சினிமாத்துறையில் ஈடுபட வைத்துவிட்டது. என்னதான் சினிமா, நடிப்பு என்று என்னுடைய உழைப்பைக் கொட்டினாலும், ஒரு போதும் என்னுடைய லிமிட்டை எந்த இடத்திலும் தாண்டி சென்றதில்லை.

அதேபோல் இதுநாள்வரையில் என்னை எந்த பார்ட்டியிலும் யாரும் பார்த்திருக்க முடியாது. பார்ட்டிக்குப் போவது பொதுவாக எனக்குப் பிடிக்காத விஷயம். அதேபோல, எனக்குத் தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ... உதவி என்று வந்தால் எந்த நேரம் என பார்க்காமல் ஓடிப்போய் உதவி பண்ணுவேன். அதுதான் என்னுடைய குணம்'' என்று மும்தாஜ் கூறியுள்ளார்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து வெற்றியால் வெளியேறியது பாகிஸ்தான்..!

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா? பாஜக விளக்கம்..!

கருப்பு வெள்ளை கௌனில் தேவதை லுக்கில் பூஜா ஹெக்டே..!

சிவப்பு நிற சேலையில் அசரடிக்கும் அழகியாய் ஜொலிக்கும் திவ்யபாரதி.. லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

ப்ரதீப்புக்கு ராஜயோகம்! தொட்ட படமெல்லாம் ஹிட்டு! – ‘ட்ராகன்’ கதற கதற பிளாக்பஸ்டர்!

அடுத்த கட்டுரையில்