Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்கள் நடிகர்களை அப்படி பார்க்கதான் விரும்புகிறார்கள்… சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூர்!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (07:23 IST)
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம்  மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

இதையடுத்து இப்போது அவர் நானியோடு நடிக்க உள்ள படத்துக்காக 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இணையும் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது அவர் மொழி தாண்டி அனைத்து விதமான சினிமாக்களிலும் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார். அதில் “குறிப்பிட்ட மொழிக்குள் சிக்கிக்கொள்ள விருப்பமில்லை.  அனைத்து விதமான படங்களிலும் நடிக்க ஆசை. கதை மற்றும் பாத்திரங்களின் தன்மைதான் எனக்கு முக்கியமானது.

பார்வையாளர்களும் நடிகர்களை புதிய வித்தியாசமான-இதுவரை பார்க்காத வேடங்களில் பார்க்கதான் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் விரும்பும் கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் என் ஆசையும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments