Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்த விட கஸ்தூரி கிழவிக்கு அஞ்சு வயசு கம்மிதான் – ரசிகருக்கு நெத்தியடி பதில் கொடுத்த நடிகை!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (17:29 IST)
நடிகை கஸ்தூரி தன்னை கிழவி என்று சொன்ன அஜித் ரசிகருக்கு பதில் சொல்லும் விதமாக கமெண்ட் செய்துள்ளார்.

நடிகை கஸ்தூரி சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். வாண்டட் ஆக பஸ்ஸில் ஏறி தானே போய் சில பஞ்சாயத்துகளிலும் கருத்து சொல்லி வருவார். சமீபத்தில் வனிதா விஜயகுமார் திருமண விவகாரத்தை விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் அவருக்கு ஒரு சேர ஆதரவும் எதிர்ப்பும் இருந்துகொண்டே இருக்கும்.

இந்நிலையில் தென்காசி பேன்பாய் என்ற ஐடியில் இருந்து ஒரு வீடியோ பகிரப்பட்டு அந்த வீடியொவில் இருப்பது ’இது நம்ம கஸ்தூரி கிழவிதான. அந்த காலத்துல சரியான பிகரா இருந்திருப்பா போல… ‘ என மோசமாக கமெண்ட் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அந்த டிவீட்டில் தல அஜித் மற்றும் வலிமை போன்ற ஹேஷ்டேக்குகள் இடம்பெற்று இருந்தன.

இதை வைத்து சம்மந்தப்பட்ட நபர் அஜித் ரசிகர் என முடிவுக்கு வந்த கஸ்தூரி ‘எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் சார் கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதில் காமெடி என்னன்னா, கஸ்தூரி அஜித்தைவிட 5 வயது குறைவானவர். ஹய்யோ, ஹய்யோ’  எனப் பதிலளித்துள்ளார்.

மேலும் அடுத்த டிவீட்டில் ‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா. உங்களை மாதிரியான அஜித் ரசிகர்களால், மரியாதைக்குரிய அஜித் ரசிகர்களுக்கும் சேர்த்து கெட்ட பேரு. அதை புரியற அளவுக்காவது அறிவிருக்கா, இல்லையா?’ எனவும் கடைசியாக ‘இந்த டிவீட்டை கொண்டு யாரும் அஜித்தின் புகழை கெடுக்க நினைக்க வேண்டாம்’ எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்