Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் GOAT திரைப்படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை!

vinoth
திங்கள், 22 ஜனவரி 2024 (07:21 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இப்போது சென்னை கோவளம் பகுதியில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த படத்தில் பல்வேறு நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வரும் நிலையில் தற்போது பிரபல நடிகை கனிகாவும் இணைந்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “இணைந்து பணியாற்றுவதற்கு மிகச்சிறந்த நபர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

அடுத்த கட்டுரையில்
Show comments