Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலிக்க நேரம் இல்லை - மீண்டும் தனி நாயகியான இனியா

காதலிக்க நேரம் இல்லை - மீண்டும் தனி நாயகியான இனியா
, செவ்வாய், 3 மார்ச் 2015 (09:17 IST)
மௌனகுரு படத்துக்குப் பிறகு இனியாவுக்கு கிடைத்தது எல்லாம் மல்டி ஹீரோயின் சப்ஜெக்ட் அல்லது வில்லி வேடம். தனி நாயகியாக இனியா நடிப்பதற்கு இனி வாய்ப்பு அமையுமா என்ற சந்தேகம் வலுத்த நேரம், வரப்பிரசாதமாக வந்துள்ளது, காதலிக்க நேரமில்லை பட வாய்ப்பு.
ஸ்ரீனிவாசன் இயக்கும் இந்தப் படம் கிராமத்துப் பின்னணியில் உருவாகிறது. காமெடிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் தந்து படத்தை எடுப்பதாக இயக்குனர் தெரிவித்தார். 
 
அறிமுக நடிகர் உதயகுமார் நாயகனாக நடிக்க, நகைச்சுவை பகுதிகளுக்கான பொறுப்பை கஞ்சா கருப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை போன்று காமெடியும் காதலும் கலந்த கலகல படமாக இது இருக்கும் என்றார் இயக்குனர்.
 
படத்தில் கிராமவாசிகள் சிலரையும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil