Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேடையில் பாலகிருஷ்ணா தள்ளிவிட்ட விவகாரம்: நள்ளிரவில் அஞ்சலி போட்ட ட்விட்..!

Siva
வெள்ளி, 31 மே 2024 (08:11 IST)
ஹைதராபாத்தில் சமீபத்தில் ‘கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற படத்தின் ப்ரமோஷன் விழா நடந்த போது மேடையில் வைத்து அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிட்டதாகவும் அதுமட்டுமின்றி அவர் போதையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த விவகாரம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென நேற்று நள்ளிரவு இந்த சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.
 
அதில் பாலகிருஷ்ணா அவர்களும் நானும் பல ஆண்டுகளாக நண்பர்களாக ஒருவரை ஒருவர் மதித்து வருகிறோம் என்றும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அவர் வந்து கலந்து கொண்டதில் எனக்கு மிகவும் சந்தோஷம் என்றும் அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும் பதிவு செய்துள்ளார்.
 
நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிட்ட விவகாரம் குறித்து திடீரென பெண்ணியவாதிகள் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்த நிலையில் அஞ்சலியும் பாலகிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென பல்டி அடித்து அவர் பாலகிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments