Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி இந்த பிரபல நடிகைதான்.. வெளியான தகவல்!

vinoth
வியாழன், 6 ஜூன் 2024 (07:36 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த டீசரில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினிகாந்த் மிரட்டியிருப்பதாக ரசிகர்கள் புல்லரித்தனர். இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜூன் 10 ஆம் தேதி கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் சத்யராஜ் ரஜினியின் நண்பராக நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அபிராமி தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?.,. தீயாய்ப் பரவும் தகவல்!

ன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வி சொல்லும் பாடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments