Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஸ்லிம் என்பதால் நான் வல்லுறவு செய்யப்பட வேண்டுமாம் – குஷ்பூவை மிரட்டிய மர்ம நபர்!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:09 IST)
நடிகை குஷ்புவுக்கு போன் செய்து ஒரு நபர் மிரட்டல் விடுத்து வருவதாக அவர் புகார் அளித்துள்ளார்.

நடிகை குஷ்பு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவர் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தபோது திடீரென முக ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திமுகவிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ராகுல்காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவராக மாறிய குஷ்பு, சமூக வலைதளங்களிலும் பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் . ஆனால் இப்போது சமீப காலமாக பாஜக அரசைப் பாராட்டும் விதமாக தனது சமூகவலைதள பக்கத்தில் பல செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

நேற்று ராமர் கோவில் அடிக்கல் நடும் விழாவுக்கு கூட வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று சமூகவலைதளத்தில் ஒரு தொலைபேசி எண்ணைப் பகிர்ந்து அந்த நபர் தனக்கு தொடர் மிரட்டல் விடுப்பதாக சொல்லியுள்ளார். மேலும் அந்த நபர் நான் முஸ்லிம் என்பதாலேயே வல்லுறவு செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரதமர் நரேந்திரமோடியை டேக் செய்து இதுதான் ராமனின் பூமியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரவிமோகன் - கார்த்தி.. நண்பர்களின் ஆன்மீக பயணம்..!

நடிகை அபிநயா திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments