Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதியை சந்தித்து வாழ்த்திய நடிகர் சங்க நிர்வாகிகள்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (15:34 IST)
நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகி இப்போது விளையாட்டுத்துறை அமைச்சராகியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட்டது முதலே அவர் அமைச்சர் ஆவார் என பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் சமீபத்தில்  தமிழ்நாடு அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

அமைச்சரான பின்னர் “இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள மாமன்னன் படம்தான் என்னுடைய கடைசி படம். நடிகர் கமல் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த படத்தில் இருந்து விலகி விட்டேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாககிகள் உதயநிதியை சந்தித்து அவர் அமைச்சரானது குறித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்த சந்திப்பின் போது நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சச்சு, லதா, சோனியா, விக்னேஷ், நந்தா, பிரேம்குமார், ஶ்ரீமன், தளபதி தினேஷ், ஹேமச்சந்திரன், பிரகாஷ், காளிமுத்து, வாசுதேவன், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ், துணை மேலாளர் ரத்தினகுமார் ஆகியோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments