Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதையை கசிய விட்ட நடிகர் மனைவி - கடுப்பான இயக்குனர்

Webdunia
சனி, 3 டிசம்பர் 2016 (11:33 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படம் 2.0 படத்தில் பாலிவுட நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.


 

 
படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார்கள். ஆனாலும் அதையும் மீறி, அக்‌ஷய்குமார் வித்தியாசமான தோற்றத்தில் ஒரு விளையாட்டு அரங்கில் இருக்கும் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இயக்குனர் ஷங்கரை கோபப்படுத்தியது.
 
இந்நிலையில் அக்‌ஷய்குமாரின் கதாபாத்திரம் குறித்து அவரின் மனைவி டுவிங்கிள் கண்ணா ஒரு பேட்டியில் உளறிக் கொட்டிவிட்டார், “எனது கணவர் அக்‌ஷய்குமார் 2.0 படத்தில் ஒரு மருத்துவராக நடிக்கிறார். அவர் ஆராய்ச்சி செய்து செய்யும் போது ஒரு தவறு ஏற்பட்டு அதில் அவர் பறவைகளின் குணாதிசயங்களைக் கொண்ட மனிதராக மாறி விடுவார்” என்று கூறிவிட்டார்.
 
ஏற்கனவே அக்‌ஷய்குமாரின் தோற்றம் வெளியானதில் கோபத்தில் இருந்த ஷங்கருக்கு, அவரது தோற்றம் குறித்து வெளியான தகவல் கோபத்தை  மேலும் அதிகமாக்கியுள்ளது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments