Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைகொடுக்காதீங்க.. கையெடுத்து கும்பிடுங்க – விவேக் சொன்னதை கொஞ்ச நாளைக்கு பாலோ பண்ணலாமா ?

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (08:22 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில் அதில் இருந்து தப்பிக்க நடிகர் விவேக் ஒரு யோசனை சொல்லியுள்ளார்.

சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டதட்ட 4000 பேருக்கு மேல் காவு வாங்கிவிட்டு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவின் இதன் பாதிப்பு 40 க்கும் மேற்பட்டோரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும், முகமூடி அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் விவேக் கொரோனா பரவாமல் இருக்க ஒரு யோசனை சொல்லியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ‘கொரோனா வைரஸ் காற்றால் பரவக்கூடிய வைரஸ் அல்ல, ஒருவருக்கொருவர் கை கொடுப்பதன் மூலமாக பரவுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மக்கள் கைகொடுப்பதற்கு பதிலாக கையெடுத்து கும்பிடும் பழக்கத்தைக் கடைபிடியுங்கள்’ எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments