Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷால் நடத்திய ரகசிய கூட்டம்

விஷால் நடத்திய ரகசிய கூட்டம்
, வியாழன், 16 ஏப்ரல் 2015 (12:19 IST)
நடிகர் சங்கப் பிரச்சனையில் விஷால் தீவிரம் காட்டி வருகிறார். இப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகள், இன்றுவரை நடிகர் சங்கத்தை பரபரப்பாக வைத்துக் கொண்டிருக்கிறது.
 
நடிகர் சங்கத் தேர்தல் மே அல்லது ஜுனில் நடத்தப்பட உள்ளது. அதில், விஷால் அதரவு அணி, தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியிட உள்ளது. அதனை விஷாலே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் விஷாலின் வீட்டில் நடிகர் நாசர், ஆனந்த்ராஜ், பூச்சி முருகன் உள்பட பலர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil