நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவதூறு: பிரபல யூடியூபர் மீது வழக்குப் பதிவு!

Siva
வியாழன், 23 ஜனவரி 2025 (16:44 IST)
நடிகர் விஷால் உடல்நிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பிரபல யூடியூபர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், மதகஜராஜா என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவுக்கு வருகை தந்திருந்த விஷால் மிகவும் நடுக்கத்துடன் காணப்பட்டார். அந்த நிலையில், அவர் காய்ச்சல் காரணமாக நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவருடைய உடல்நிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சேகுவேரா என்பவர் YouTube சேனலில் பேட்டி அளித்தார். அவரது பேட்டி பிரபல சேனலில் ஒளிபரப்பானது.

அந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக சேகுவாரா மற்றும் அந்த பேட்டியை வெளியிட்ட இரண்டு YouTube சேனல்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எவன் எப்படி போனா என்னனு இருக்காங்க.. அஜித் விஜயை கண்டபடி பேசிய பிரபலம்

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?... லிஸ்ட்டில் 8 பேர்!

அடுத்த கட்டுரையில்
Show comments