Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் கடவுள் தந்த பரிசு… சோனு சூட்டை புகழ்ந்து தள்ளிய விஷால்!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (10:21 IST)
கொரோனா பேரிடர் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்து இந்தியா முழுவதும் பாராட்டுகளைப் பெற்றார் நடிகர் சோனு சூட்.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் வேலையில்லாத தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளார் வில்லன் நடிகர் சோனு சூட். கடந்த 6 மாதங்களாக அவர் செய்த சேவையால் சினிமா நடிகர்கள் மத்தியிலேயே கூட அவருக்கு மரியாதை அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சோனு சூட்டை சந்தித்த விஷால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் ‘எனது அன்புச் சகோதரர், சோனு சூட்டைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மனித குலத்துக்குக் கடவுள் தந்த பரிசு. நீங்கள் தொடர்ந்து செய்து வரும் சமூகப் பணிகள் மூலம் ஊக்கம் அளித்துள்ளீர்கள். முன் பின் தெரியாதவர்களின் குடும்பங்களுக்காக யாரும் இம்மாதிரியான உதவிகளை செய்ய மாட்டார்கள். நீங்கள் செய்த அத்தனை உதவிகளையும் கேள்விப்பட்டு வாயடைத்துப் போய்விட்டேன். தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் கலக்கும் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜு.. எந்த படத்தில் தெரியுமா?

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments