Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தொகுதி எம் எல் ஏக்கள் எல்லாம் வெளிய வாங்க… நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (08:04 IST)
சென்னை பெருமழை காரணமான வெள்ளப் பெருக்கையடுத்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் அவர் ”வணக்கம், புயலால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்பு தண்ணீர் வீட்டுக்குள் வரும் என்பது வாடிக்கையான ஒன்று. அண்ணா நகரில் இருக்கும் என் வீட்டிலேயே ஒரு அடிக்கு தண்ணீர் நுழைந்துவிட்டது. அப்படி என்றால் மிகவும் தாழ்வான பகுதிகளில் எப்படி இருக்கும். 2015 ஆம் ஆண்டு புயலின் போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம்.

8 வருஷத்துக்கு அப்புறம் அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. சென்னை மாநகராட்சி ஆரம்பித்த மழைநீர் வடிகால் திட்டம் என்ன ஆனது? நான் இதை வாக்காளராகதான் இதை கேட்கிறேன். நடிகராக இல்லை.  தயவு செய்து சென்னை தொகுதியின் அனைத்து எம் எல் ஏக்களும் வெளியே வாருங்கள். அதுதான் பொதுமக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்.

எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கி இருப்பதை தர்மசங்கடமாகவும் கேவலமாகவும் பார்க்கிறேன்.  எதற்காக வரி கட்டுகிறோம் எனக் கேட்க வைத்து விடாதீர்கள். வந்து உதவுங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments