Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கதைக்காக கொலைகளை ஆராய்ச்சி செய்த இயக்குனர்

கதைக்காக கொலைகளை ஆராய்ச்சி செய்த இயக்குனர்
, சனி, 21 ஜூன் 2014 (20:00 IST)
கதைகளை டிவிடியில் தேடுகிறவர்கள் இருக்கும் அதே கோடம்பாக்கத்தில் கதைக்காக தெருவில் இறங்கி ஆராய்ச்சி செய்யவும் தயங்காத இயக்குனர்களும் இருக்கிறார்கள். இயக்குனர் நாகேந்திரன் அப்படிப்பட்டவர்.
 
விமல் நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவடா படத்தை நாகேந்திரன் இயக்குகிறார். விமலுக்கு இணையாக படத்தில் வருகிறார் சமுத்திரக்கனி. இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரி Babie Handa  - வை ஒரு பாடலுக்கு ஆட வைத்து படத்தின் கிளாமரை மெருகேற்றியிருக்கிறார்கள். ஆனால் அதுவல்ல படத்தின் மைக்கருத்தும், நாம் சொல்ல வந்த விஷயமும்.
 
இன்று பணத்துக்காக கொலை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு மையமாக அமைந்தது சென்னை என்பது நாகேந்திரன் ஆராய்ந்து கண்டிருக்கும் உண்மை. 20 வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற கொலைகள் பெரும்பாலும் நட்புக்காக நடத்தப்பட்டதாகவே இருக்கும். நெல்லையில் நடந்த கொலைகள் பெரும்பாலும் சாதி மோதல்களின் விளைவு. கோயம்புத்தூரில் வியாபாரத்துக்காக நடத்தப்பட்டவை. கடலூர், விழுப்புரத்தில் அரசியலுக்காக நடத்தப்பட்ட கொலைகளே அதிகம். சென்னையில் நடந்த கொலைகள் பெரும்பாலும் பணத்துக்காக நடந்தவை. 
 
சென்னையில் ஆரம்பித்த, 'பணத்துக்காக கொலை' இன்று நாடெங்கும் விஷமாக பரவிக் கிடக்கிறது. இந்த கொலை ஆராய்ச்சி இந்தப் படத்துக்கு பெரிதும் பயன்பட்டிருக்கிறது. 
 
நீயெல்லாம் நல்லா வருவடா படத்துக்கு இப்போதே திரைத்துறை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாகேந்திரன் சொல்லும் இந்த கொலை ஆராய்ச்சியும் அதற்கு காரணமாக இருக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil