Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமல் நடிப்பில் 16 மொழிகளில் ரிலீஸாகும் ‘பெல்லடோனா’!

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2024 (10:48 IST)
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது.

இந்நிலையில்தான் அவர் நடித்த விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. அதன் பின்னர் அவர் நடித்த ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ மற்றும் ‘சார்’ ஆகிய படங்கள் கவனம் பெற்றன.

இதையடுத்து அவரின் 35 ஆவது படமாக ‘பெல்லடோனா’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சந்தோஷ்பாபு முத்துசாமி இயக்குகிறார்.தேஜஸ்வினி சர்மா மற்றும் மேக்சினோ பவ்னம் ஆகியோரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். ஹாரர் திரைப்படமாக உருவாகும் இந்த படம் 16 மொழிகளில் ரிலீஸாக உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

’ஜனநாயகன்’ படத்தை வாங்க ஆளில்லையா? வாங்குவதற்கு போட்டியா? இன்னும் வியாபாரம் ஆகவில்லை

நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி.. போலீஸ் வந்ததும் தெறித்து ஓடிய அஜித் பட நடிகர்!

வரதட்சணை வாங்கி திருமணம் செய்தேனா? ரம்யா பாண்டியன் விளக்க வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments