Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 எண்றதுக்குள்ள பக்கம் பக்கமா கிசுகிசுக்கிறாங்களே...

10 எண்றதுக்குள்ள பக்கம் பக்கமா கிசுகிசுக்கிறாங்களே...
, வியாழன், 21 மே 2015 (11:14 IST)
10 எண்றதுக்குள்ள படத்தை விஜய் மில்டன் இயக்க விக்ரம் நடித்து வருகிறார். தயாரிப்பு முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ.
படம் அவர்கள் சொன்ன தேதியில் முடியாமல் இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்நேரம், விஜய் மில்டனுக்கும் விக்ரமுக்குமிடையே தகராறு என்று வதந்தி கிளம்பியுள்ளது. இது குறித்து படக்குழுவிடம் பேசினோம்.
 
நாம் கேட்டது அவர்களுக்கே ஆச்சரியம். ஏனென்றால், அப்படி எந்த சம்பவமும் படப்பிடிப்பில் நடைபெறவில்லை. எல்லாம் சுமூகமாகப் போய்கொண்டிருக்கிறது. டப்பிங் முடிந்துவிட்டது. இனி நான்குநாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி, அதுவும் முடிந்தால் பின்னணி இசை சேர்ப்புதான் என்று நேர்மறை தகவல்களாக கூறினார்கள். அப்படியானால் சண்டை?
 
அதெல்லாம் சும்மா பாஸ் என்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil