Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய் சேதுபதியை விரட்டிய போராட்ட மாணவர்கள்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:36 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெரும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவாக திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக் கழக மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

 
இதனை தொடர்ந்து அங்கு வந்த நடிகர் விஜய் சேதுபதியை, உடனே திரும்பி போங்கள் என்று மாணவர்கள் கோ‌ஷமிட்டனர்.  மேலும் விளம்பரம் தேடும் நடிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று விஜய் சேதுபதியை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 
 
காந்தி கிராம பல்கலைக்கழகம் அருகே கருப்பன் என்ற சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. கருப்பன் படத்தில் நடிகர் விஜய்  சேதுபதி, நடிகர் சிங்கம் புலி ஆகியோர் நடித்து வருகின்றனர். போராட்டம் நடத்தும் மாணவர்கள் சிலர் கருப்பன் என்ற சினிமா  ஜல்லிக்கட்டு சம்மந்தமான கதை என்பதால் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேச சொல்லலாம் என்று அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு விஜய் சேதுபதி படப்பிடிப்பு இருக்கிறது வர வாய்பில்லை, என்று கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்பு  முடிந்த பின்னர் வந்து கலந்து கொள்ளவதாக கூறி படப்பிடிப்பு முடிந்து சாப்பிட்டுவிட்டு வந்துள்ளார்.
 
இதனால் கொதிப்படைந்த மாணவர்கள் உண்மையிலேயே ஜல்லிக்கட்டுக்கும், அதற்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு  தருபவராக இருந்திருந்தால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு எங்களுக்கு ஆதரவு தந்திருக்க வேண்டும். விளம்பரத்திற்காக  மட்டுமே வரும் நடிகர்கள் எங்களது போராட்டத்திற்கு தேவையில்லை என்று கூறி, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து  கோ‌ஷமிட்டனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments