Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40ஆவது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை

Webdunia
திங்கள், 23 ஜூன் 2014 (15:38 IST)
'இளைய தளபதி' நடிகர் விஜய்க்கு ஜூன் 22 அன்று 40ஆவது பிறந்த நாள். இதையொட்டி, அவர் ரசிகர்களுக்கு விடுத்திருக்கும் செய்தி, இதோ:
 
என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு அன்பான வணக்கம். 
 
வழக்கமாக நான் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. அன்றைய தினத்தை ஏழைகளுக்கு உதவும் தினமாக அறிவித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் பகுதியில் என் பிறந்த நாள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணியுங்கள். கண்தானம், ரத்த தானம் செய்யுங்கள், பெண்களுக்குத் தையல் மிஷின், மாணவர்களுக்கு லேப்டாப், ஏழைகளுக்கு அன்னதானம் என உங்களால் இயன்றதை செய்யுங்கள்.
 
உங்களின் இந்த சேவைதான் எனக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கும். உங்களின் இந்தத் தொண்டு மேலும் பல மடங்கு உயர வேண்டும். அதற்கு நீங்கள் பொருளாதார நிலையில் உயர வேண்டும். அப்போதுதான் இந்த சேவைகள் சாத்தியமாகும்.
 
நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் உறுதியோடும், உண்மையோடும் உழையுங்கள். கண்டிப்பாக வெற்றியை பெறுவீர்கள். உங்களின் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் விலையுண்டு, நீங்கள் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்ற உணர்வை பெறுவேன். உண்மையோடு உழையுங்கள், உயர்ந்த இடத்தை பிடியுங்கள். இதுவே நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் எனது பிறந்த நாள் பரிசாகும்.
 
இவ்வாறு நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

Show comments