Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெறிக்கவிட்ட நடிகர் விஜய்யின் ’ மாஸ்டர் ... டுவிட்டரில் டிரெண்டிங்...’

Webdunia
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (19:05 IST)
டுவிட்டரில் தெறிக்கவிட்ட நடிகர் விஜய்யின் ’ மாஸ்டர் டிரெண்டிங்
தளபதி விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே மீதம் இருப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என படக்குழுவினர்களிடமிருந்து தகவல் வெளிவந்தது. இன்று வெளியாகியுள்ள ஒரு குட்டி கத பாடல் குறைந்த நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
 
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
 
கல்லூரி பேராசிரியாக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவரது மாணவராக சாந்தனு நடித்துள்ளார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை' என்ற முதல் சிங்கிள் டிராக் சற்றுமுன் படக்குழு வெளியிட்டுள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜ் பாடியுள்ள இப்பாடலை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். 
டுவிட்டரில் தெறிக்கவிட்ட நடிகர் விஜய்யின் ’ மாஸ்டர் டிரெண்டிங்
அந்தப் பாடலைக் கேட்ட விஜய் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை டுவிட் வாயிலாகத் தெரிவித்து டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments