Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயை கடவுளாக்கி மாலை போட்ட ரசிகர்கள் - வைரல் வீடியோ

விஜயை கடவுளாக்கி மாலை போட்ட ரசிகர்கள் - வைரல் வீடியோ
, திங்கள், 8 மே 2017 (15:23 IST)
நடிகர் விஜயை கடவுளாக பாவிக்கும் அவரின் சில ரசிகர்கள், அவரை சாமியாக்கி, மாலையும் போட்டுக்கொண்ட சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் சிலர் அவரை கடவுளாக பார்க்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில், நடிகர் விஜய்க்கு சிலை வைத்து, அவரை கடவுளாக சித்தரித்து, தீபாரதனை காட்டி, ஐயப்பன் சாமிக்கு மாலை போடுவது போல், தங்களுக்கு மாலை அணிவித்துக் கொண்டு, கடவுளே, விஜயே, தளபதியே, அன்பே, அழகே, அறிவே, செல்லமே என கோஷங்கள் எழுப்பிகிறார்கள். 
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு நடிகரை கடவுள் போல் சித்தரிப்பதற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்களை தெய்வமாக மதிக்கத் தெரியாத இவர்கள், ஒரு நடிகரை கடவுள் போல் பாவித்து மாலை போடுவது வெட்கக்கேடானது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், விஜய் ரசிகர்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகேந்திர பாகுபலி அமரேந்திர பாகுபலியுடன்: வைரல் புகைப்படம்!!