Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சன்னி வெய்ன் - ஒரு நாயகன் உருவாகிறான்

சன்னி வெய்ன் - ஒரு நாயகன் உருவாகிறான்
, வெள்ளி, 6 மார்ச் 2015 (16:10 IST)
மலையாள சினிமா சமீபத்தில் கண்டெடுத்த நடிப்பு தங்கம், சன்னி வெய்ன். செகண்ட் ஷோ, நீலாகாசம் பச்ச கடல் சுவந்த பூமி படங்களில் சன்னி வெய்ன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அவரது முத்திரைப் படம், அன்னாயும் ரசூலும்.
 
பகத் பாசில், ஆண்ட்ரியா நாயகன் நாயகியாக நடித்த இந்தப் படத்தில், படத்தின் கதையை வாய்ஸ் ஓவரில் சொல்கிறவர் சன்னி வெய்ன். பகத்தின் நண்பராக மிகமுக்கியமான வேடத்தை இந்தப் படத்தில் அவர் செய்திருப்பார். பகத்தைவிட பல நேரங்களில் சன்னி வெய்னின் நடிப்புதான் பார்வையாளர்களை கவரும், கவர்ந்தது.
 
சமீபத்தில் வெளியான சாரதி படத்தில் சன்னி வெய்ன் நாயகனாக நடித்திருந்தார். படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு நாயகன் வாய்ப்பு சன்னி வெய்னுக்கு கிடைத்துள்ளது. பிரவீண் பிரபாகரனின் புதிய படத்தில் சன்னி வெய்ன் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம்.
 
பகத் பாசில் போன்று அட்டகாசமான நடிகனாக உயர வேண்டிய எல்லா திறமையும் சன்னி வெய்னுக்கு உள்ளது. அவர் வெற்றிபெற நமது வாழ்த்துகள்.

Share this Story:

Follow Webdunia tamil