Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவாஜி வில்லனின் கபாலி ஆசை

சிவாஜி வில்லனின் கபாலி ஆசை
, திங்கள், 14 செப்டம்பர் 2015 (11:27 IST)
சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் சுமன். தமிழ் திரையுலகினரால் மறக்கப்பட்ட சுமனை சிவாஜியில் ஷங்கர் ஒயிட் அண்ட் ஒயிட் வில்லனாக்கினார். அந்தப் படம் வெளிவந்த நாளிலிருந்து இன்றுவரை சுமன் பிஸியோ பிஸி. ரஜினி படத்தில் நடித்தால் மார்க்கெட் பலபடி உயரும் என்பதற்கு சுமன் சிறந்த உதாரணம்.



 


சேலத்தில் நடந்த கராத்தே போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டவர், ரஜினியின் புதிய படம், கபாலியில் நடிக்கும் தனது விருப்பத்தை சுமன் வெளியிட்டார்.

"சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிசாருடன் நடித்தது என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது. அந்தளவிற்கு எனக்கு அந்த படம் பெயர் பெற்று தந்தது. இந்த பட வாய்ப்பினால் தான் நான் மீண்டும் பிஸியாகி இருக்கிறேன். இந்தியிலும் நடித்து வருகிறேன். இதற்கு காரணம் ரஜினிசார்தான். தற்போது ரஜினிசார் கபாலி படத்தில் நடிக்கிறார். இதில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன்.

இந்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். சினிமா இண்டஸ்டிரி நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். நடிகர்கள், நடிகைகள் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் ரஜினிசார். அவர் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும். இதைத்தான் அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்" என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil