Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரோட்டா சூரி உண்மையில் எத்தனை பரோட்டா சாப்பிட்டார்?

பரோட்டா சூரி உண்மையில் எத்தனை பரோட்டா சாப்பிட்டார்?
, சனி, 4 ஜூன் 2016 (18:00 IST)
வெண்ணிலா கபடி குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிட்ட சூரி உண்மையில் எத்தனை பரோட்டா சாப்பிட்டார் என்று டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 


 
ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு அடைமொழி மூலம் மக்கள் மனதில் இடம்பெறுகின்றனர். அந்த அடைமொழி படத்தின் பெயர்களாக பெரும்பாலும் இருக்கும். ஆனால் படத்தில் பரோட்டா சாப்பிட்டதால் பரோட்டா சூரி என்று பெயர் பெற்று பிரலமானவர் நகைச்சுவை நடிகர் சூரி.
 
வெண்ணீலா கபடி குழு படத்தில் சூரி பரோட்டா சாப்பிடும் போட்டியில் 50 பரோட்டா சாப்பிடுவார். ஆனால் கடைக்காரார் ஒப்புகொள்ளாததால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து போட்டி தொடங்க வேண்டும் என்றும் தான் மீண்டும் 50 பரோட்டா சாப்பிட போவதாக கூறுவதும் படத்தின் உச்சக்கட்ட நகைச்சுவை காட்சி. அந்த ஒரு நகைச்சுவை காட்சி மூலம் பரோட்டா சூரி என்று பெயரும் எடுத்ததுடன் பிரபலமும் ஆனார்.
 
இதுகுறித்து ரசிகர் ஒருவர் டுவிட்டரில் சூரியிடம் உண்மையில் வெண்ணிலா கபடி குழு படத்தில் எத்தனை பரோட்டா சாப்பிடீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள சூரி தான் வெண்ணிலா கபடி குழு படத்தில் 17 பரோட்டாக்கள் சாப்பிடதாக கூறியுள்ளார்.   

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாயா இயக்குனரின் அடுத்தப் படம்