Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பிவிற்கு மீண்டும் ஏழரை - ஏஏஏ படப்பிடிப்பு ரத்து

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (17:11 IST)
நடிகர் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


 

 
திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் சிம்பு 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
 
இதில், மதுரை மைக்கேல் கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்துள்ளது. அடுத்து அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் காட்சிகள் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக படக்குழு தாய்லாந்தில் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். 


 

 
அதற்காக சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் சுமார் 20 பேர் தாய்லாந்திற்கு சென்றிருந்தனர். ஆனால், 20 நாட்களாக அவர்கள் அங்கு தங்கியும் 2 நாட்கள் மட்டுமே முழுமையான படப்பிடிப்பு நடத்தினார்களாம். இதனால், இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம். உடனடியாக அவர்களை சென்னை திரும்பி வரும்படி கூறிவிட்டாராம்.
 
மேலும், தாய்லாந்தில் எடுக்க திட்டமிட்டிருந்த காட்சிகளை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் எடுக்க சொல்லி விட்டாராம். இதனால், படக்குழுவினர் என்ன செய்வது எனத் தெரியமால் முழித்து வருகிறார்களாம். 
 
சிம்பு படம் என்றாலே பிரச்சனைதானா?...
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து வெற்றியால் வெளியேறியது பாகிஸ்தான்..!

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா? பாஜக விளக்கம்..!

கருப்பு வெள்ளை கௌனில் தேவதை லுக்கில் பூஜா ஹெக்டே..!

சிவப்பு நிற சேலையில் அசரடிக்கும் அழகியாய் ஜொலிக்கும் திவ்யபாரதி.. லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

ப்ரதீப்புக்கு ராஜயோகம்! தொட்ட படமெல்லாம் ஹிட்டு! – ‘ட்ராகன்’ கதற கதற பிளாக்பஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments