Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாந்தனு நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் முப்பரிமாணம்

சாந்தனு நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் முப்பரிமாணம்
, சனி, 25 ஜூலை 2015 (16:06 IST)
சாந்தனு - கீர்த்தி திருமணம் விரைவில் நடக்கயிருக்கிறது. காதலியை கைப்பிடிக்கப் போகும் நேரத்தில் சில தீர்மானங்களை சாந்தனு எடுத்திருக்கிறார். இனிமேல் வழவழ கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்பது அதில் ஒன்று.
 
சாந்தனுக்கு இதுவரை போல்டான கதாபாத்திரம் அமையவில்லை. காதலியிடம் வழியும் கதாபாத்திரங்களே கிடைத்தன. தனது தோல்விக்கு இந்த கதாபாத்திரங்களும் ஒரு காரணம் என நினைக்கிறார். அதனால், போல்டான கதாபாத்திரங்கள் உடைய கதையில் மட்டுமே நடிப்பதென முடிவு செய்துள்ளார். முப்பரிமாணம் அப்படி தீர்மானித்து ஒப்புக் கொண்ட படம்.
 
அதிரூபன் என்பவர் இயக்கும் இந்தப் படம் ரொமான்டிக் த்ரில்லராக தயாராகிறது. சிருஷ்டி டாங்கே நாயகி. முக்கியமான வேடத்தில் அப்புகுட்டி நடிக்கிறார். காதலை இன்னொரு பரிமாணத்தில் சொல்லும் கதையம்சம் கொண்டதாம் இந்தப் படம். மேலும், நாயகன், நாயகி, அப்புக்குட்டி என்ற மூவரை சுற்றி நடக்கிற கதை. அதனால் முப்பரிமாணம் என பெயர் வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil