Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷை அப்பட்டமாக காப்பியடித்த ஷாருக்கான் - வைரல் வீடியோ

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (19:44 IST)
ஜீரோ (Zero) படத்தில் நடிகர் ஷாருக் கான் மிகவும்  வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். அவர் உயரம் அதிகமில்லாதவராக நடிக்க அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
 
ஜீரோ படத்தின் புதிய ப்ரோமோ டீஸர் ஒன்று நேற்று வெளிவந்தது. அதில் அவர் பேசும் ஒரு வசனம் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
காரணம் அந்த வசனத்தை படிக்காதவன் படத்தில் தனுஷ் பேசியுள்ளார். அதை அப்படியே எடுத்து ஹிந்தி மொழியில் பயன்படுத்தியுள்ளனர்.
 
https://www.youtube.com/watch?v=5YrnS9PFsMI

 
"Hum jaise londo se dekhke pyar nahi hota bahen ji dekhte dekhte ho jaata hai" என வரும் வசனத்தின் அர்த்தம்  "என்ன மாதிரி பசங்களை பாத்தா புடிக்காது, பாக்க பாக்க தான் புடிக்கும்" என தனுஷ் படிக்காதவன் படத்தில் பேசிய வசனம் தான்.
 
அதுமட்டுமல்லாது ஜீரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் தனுஷின் ராஞ்சனா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments